Monday, 20 July 2009

சிதைந்த நட்பின் மலரும் நினைவுகள்
மனதை சூழும் நேரம்
விழியின் இருதுளி கைசுடும்
கலையாத கனவாய் என் நெஞ்சில் நிறைந்துவிட்ட
அந்த மாலைநேரப் பொழுதுகள்
விடலைப் பருவத்தின் தொடக்கத்தில்
தடம் மாறாமல் கைப்பிடித்துச் சென்ற
பொக்கிஷமான நட்பு
அவள்
எவனோ "ஒருவனுடன்"
ஓடிப்போன தினத்தில் இருந்து
ரணமாய் மாறிப்போனதேன்!??

Sunday, 12 July 2009

நட்பு

என் கண்ணீரை வார்த்தைகளால் துடைத்தவள்
என் காதலுக்காக மனம் வருந்தியவள்
மனம் துவண்ட பொழுதிலெல்லாம் தோள் கொடுத்தவள்
என்னிடம் "பேச மாட்டேன் போ" என்ற
அந்த அரை வினாடியில் உணர்ந்தேன்
வலி காதலில் மட்டும் இல்லை
நட்பில் கூடத்தான்.. :(

Friday, 3 July 2009

தாய்மை எனப்படுவது யாதெனில்...

ஆணோடு பெண் சேரும் ஆனந்தவேளை
அன்றோடு முடியுமந்த ஆணின் கவலை
பெண்ணெனும் பேதை தொடர்வாள்
வாழ்வெனும் பயணத்தில்
இன்னுமோர் தொடக்கம்...
ஐயிரண்டு திங்கள் தன்வாழ்க்கை கழிப்பாள்
குருதியுடன் இணைந்த குழவியும் கலந்து..
உதிரம் உருக்கி வளர்ப்பாள்
தன உணவும் ஊட்டி வளர்ப்பாள்...
முன்னூறு தினம்சென்று மூச்சடக்கி உயிர்ப்பாள்..
மகனோடு தாயென்று மீண்டும் பிறப்பாள்...