Tuesday, 23 February, 2010

மணிமேகலை...8 மலர் உதிர்ந்தது

விதியெனும் தாயும் வாழ்வெனும் சேயும்

வஞ்சிக்க, உயிர் துறக்கும் நிலை வந்தாள் மேகலை

தன் மனம் அணைத்திட்ட காதலன் முகம் காணத் துடித்தாள்

விரைந்தான் அவளிடம் வாணன், வந்திய தேவன்

மாளிகையில் காண வில்லை

தோழியரோ அறியவில்லை

நீராழி மண்டபத்தே ஓர் கானம்

தன் கருவிழியின் மையெடுத்து நரம்புதனைத்

தந்தியாக்கி யாழ் சமைத்து

படைத்திட்ட ஓர் கானம்

இன்று ஒப்பாரியின் ஓர் வடிவம்

இனிய புனல் அருவி தவழ்

இன்ப மலைச் சாரலிலே

கனிகுலவும் மர நிழலில் கரம் பிடித்து உகந்ததெல்லாம்

கனவு தானோடி! சகியே! நினைவு தானோடி!!

ஒளியிழந்த இரு கண்கள் ஒளிர்ந்தன!

En thamayan கொடியோனில்லை

சொர்க்கம் வெறும் சொப்பனமில்லை

இந்த அற்புதமும் பொய்யில்லை

உதிர்ந்தன சொற்கள்

மடி சேர்ந்தான் அவள் சிரத்தை

கன்னியவள் கண்களோ அருவியாக,

இதழ்கள் ரெண்டும் அசைய மறுக்க,

அவள் மனம் படைத்தது ஓர் கானம்

என் நெஞ்செல்லாம் காதல் நிரப்பி கண்களில் வண்ணக் கனவுகளும் தெளித்துப்

பின் நெருப்பில் தள்ளியதேன் என் கண்ணா!

கனவில் நான் கண்ட காட்டாறு கானலாய்ப் போனதேன்?

யாக்கையை இறகாக்கிக் குருதியை மையாக்கி நான் வடித்த கவிதைகள்

யாவும் நீர்த்துப் போனதேன்?

நாளொரு நீயும் இரவொரு விண்மீனுமாய் நான் வளர்த்த காதல்

காற்றில் கலந்ததுமேன்?

நிதமொரு துளியாய் நான் சேர்த்த நம்பிக்கைக் கூடு சிதைந்ததுமேன்?

சட்டென ஓர் கணத்தில் என் வாழ்வே பொய்த்துப் போனதுமேன்?

உயிர் முழுக்க நீயிருக்க வெறும் கூட்டில் நடைபிணமாய்

எனக்கிந்த வாழ்வும் ஏன்?

விழிவழி ஒழுகும் கண்ணீரில் என்னுயிர் இன்னும் கரைந்து போகாததேன்?

நீ மற்றொருவள் மணவாளன் என்றறிந்தும் என் குலை இன்னும் அறுந்து போகததுமேன்!!?

ஒளிர்ந்தன விழிகள்!! பிரிந்தது அவள் உயிர்!!

மாண்டாள் ஓர் காதலி..

யாவரும் வாழிய பல்லாண்டு..

கரைபுரளும் காவிரியின் கரையினிலே நான் நிற்கும்

நிமிடங்கம் ஒவ்வொன்றும் என் விழிச் சுழலில் சுழன்றடிக்கும்

கற்களையும் kasiந்துருகச் செய்துவிட்ட பேதையவள்

காதலினால் கடவுளுமாய் ஆன கதை...

மணிமேகலையின் வரம் .. 7

தஞ்சை மாநகரம், அந்நேரம் அது ஓர் நரகம்

முழுமதியைக் காண வந்தாள் மான் விழியால்

விழியிரண்டோ குளமாக, இடை மெலிந்து துரும்பாக

வேண்டினாள் ஓர் வரம்!

என் தந்தை உயிர் வேண்டேன்! தமையன் உயிர் வேண்டேன்!

எந்தப் பாதகன் உயிரும் வேண்டேன்!

நான் புரிந்திட்ட கொடுஞ்செயலை

ஏற்றுக் கொண்ட காதலனை மீளச் செய்க!

மடை திறந்த வெள்ளம் போல்

தன் மனம் திறந்தாள் மேகலை

ஆதித்தனின் ஓலை கண்டு கலங்கின இரு கண்கள்

விம்மியது ஓர் நெஞ்சம்

விழி உயர்த்திக் கண்டாள் மேகலையின் உருவம்

இப்படியும் ஓர் காதலா!?

குந்தவையே நாணினாள்!!

விண்மீனோ மறைந்தது! ஆதவன் மீண்டும் உதித்தது!

சிறை சென்ற வாணன் அவன் திறம் கொண்டே வெளிவந்தான்

ஆடியின் பெருக்கு, காவிரியின் உவப்பு

அலைபாய்ந்ததன கண்கள்..

சுழன்று பின் சென்றது அவன் நெஞ்சம்

தன் உயிர் கரைத்து அன்பளித்த ஓர் நங்கை

மான் விழியாள் கார்குழலாள்

சம்புவரையர் குலமகள்

நாணம் எனும் சொல்லறியா மணிமேகலை,

தேவதைகளின் தேவதை

வெள்ளம் நாடி ஓடி வந்தாள் ஓர் பிச்சியென!!

கண் கலங்க, உளம் பதைக்க

உயிர் உருக ஏந்தினான் ஓர் மலரென அவளை

நாடினான் கோ உறையுமிடம்!

தர்மம் தனை காத்து நின்று

தீயவரின் கரம் ஒடுக்க

மலர்ந்தது ஓர் வசந்தம்

உற்றோரும் சுற்றாரும் சூழ்ந்திருக்க

அருள்மொழியோ தியாகச் சிகரமாகி விட

சற்றே மறந்தனர் ஓர் பிச்சியை

தன் உயிர் உருக்கி உடல் உருக்கி

அன்பை மட்டும் பிழிந்தளித்த

ஓர் நங்கை


மணிமேகலை...6 கொலைக் களம்

கொலைக் களம்

அங்கே ஆதித்தச் சிறுத்தை நுழைந்தது

கனவாக தான் கண்ட காதலியே

தம்மை கொலை வாளுடன் அழைப்பது கண்டான்

தன மதி மறந்தான்

யானே பாவியானேன்! உன் காதலனைக் கொன்றிட்டேன்

அவன் சிரத்தையும் கொய்திட்டேன்!

என்றெனைக் கொல்வாயோ!? இந்நரகத்தி லிருந்தென்னை மீட்பாயோ!

கண்ணே! நீயே என் காதலி.. உடன் வருக என்னுடன்

சென்று படைப்போம் ஓர் புது உலகு!!!

வெறி கொண்டாடினான் ஆதித்தன்!

நாதா! என் உள்ளம் என்றும் உங்கள் வசமே!

ஆயினும் விதி போடும் பெருந்தடை

நான் யார் தெரியுமா!! நான் யார் தெரியுமா!!?

உரைத்தாள் நந்தினி ஓர் உண்மை! தன வாழ்வின் முதல் உண்மை

மீண்டும் பிதற்றினான் ஆதித்தன்

யானே பாவி! யானே கள்வன்

திறந்தன கொலைக்களக் கதவுகள்

உளம் பதைத்தான் வாணன்

சற்றே அவ்விடம் செல்ல விழைந்தான்

சட்டென அணைந்தன கண்கள்

கரியின் பிடிபட்டு சுழன்றன கால்கள்

காரிருள் சூழ்ந்தது ஆங்கே

ஆதித்தன் விண்ணுலகம் கண்டான்

தன் இன்னுயிர் நீத்தான்

மெல்லத் திறந்தன வாணன் கண்கள்

கலங்கிய காட்சியும் சிதைந்திட்ட குரலும்

சூழ்ந்த இருளும் முன்ஜென்ம வினையும்

ஒரு சேரக் கண்டான் அக்காட்சியை

அந்தோ! மடிந்தனனா என் தலைவன்!

எங்கே என் தலைவன்! வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி!

சேவூரைச் செவ்வூராக்கிய கால்கள் எங்கே!

எதிரிகளை வதம் செய்த கரங்கள் எங்கே!

யான் செய்த சத்தியமும் மேற்கொண்ட ஓர் செயலும்

ஒரு சேரப் போனதே இன்று விண்ணுலகம்

அரற்றினான், மூவேந்தரும் போற்றும் வாணன்

வந்திய தேவன்

அதிர்ந்தது அவ்விடம் – நுழைந்தார் அரையர்

விதியின் ஆட்டத்தில் விளையாட்டுப் பொம்மையான சம்புவரையர்

சிநேகிதத் துரோகி, மோகினியின் வலை வீழ்ந்த உன்மத்தன்

மாபெரும் வீரன், கந்த மாறன் உடன் இருக்க

நீயே கொன்றாய் சோழ குலக் கன்றை!

உறைந்தான் வாணன், அதை உடைத்தாள் மணிமேகலை

தேவதைகளின் தேவதை.. யானே கொன்றேன்!

சோழனை யானே கொன்றேன்! உறுமியது ஓர் கருஞ்சிறுத்தை

உறைந்தனன் வாணன்! உறைந்தார் அரையர்!

பேதையவள் சொற்கள் அங்கே ஏறவில்லை அம்பலம்

அக்கியினியின் வசம் இருந்த கோட்டை மதில் தாண்டி வந்து

தன் தலைவன் பொன்னுடலை சுமந்து சென்று

கிடத்தினான் வாணன், வந்திய தேவன்

சாய்ந்தனன் ஆல மரமென

காதலனோ சிறை செல்ல, கண்ணீரில் தினம் கரைய

நடந்தாள் மணிமேகலை, தன் உயிர் கரைத்து

சுமந்தாள் ஆதித்தன் ஓலைதனை!

யானே கொன்றேன், ஆதித்தனை யானே கொன்றேன்!


மணிமேகலை...5

வீரம் விளைவிக்க வேங்கைகள் சீறிச் சென்றன முன்னே

ஆடி மகிழ நீராழி நாடின பைங்கிளிகள்

அல்லியிடைக் கன்னியர்காள் செங்கழுநீர் நிறத்தினர்காள்

சம்புவரையர் குலமகள்கள் ஊடே கண்பறிக்கும் மின்னலென

முழுமதியாய் நந்தினியும் உடன் இருக்க

வேட்டையாடிய காளைகளோ களைத்திருந்த வேளையினில்

உயிர் பிழைத்த ஓர் சிறுத்தை ஏகியது அம்மண்டபத்தே

இசைக்குயில்கள் கூட்டினுள்ளே குரங்கொன்று புகுந்ததுபோல்

ஆதவனின் அணைப்பினிலே நதியில் நீராடி வந்த மான்கள் ரெண்டோ

அறியவில்லை இந்நிகழ்வை

சட்டென பாய்ந்தது சிறுத்தை – நங்கை போட்டேனக் கலைந்தது நெஞ்சம்

நண்பர்கள் காதினில் கொடும் வேலெனப் பாய்ந்தது அலறல்!

சீறினர் காட்டாற்று நீரில்..

சுழல் கண்ட மான்களோ தள்ளாட, வேங்கைகள் ரென்றும் கையேந்த

ஏறின கரை மண்டபத்தே..

கருங்குவளை சிவந்தது மீண்டும்..எங்கள் மேகலை கன்னம் சிவந்தது மீண்டும்

ஆசைக் காதலா! மனம் கவர்ந்த மணாளா! என்னை ஏந்தியதும் நீயோ!?

அல்லால் பகலிலும் கனவோ! மெல்லத் திறந்தன கண்கள்

சட்டெனக் கலைந்தது கனா! ஏந்தியவன் காலன்..

அலை பாய்ந்த மனதை அடக்கிட விழைந்து வடித்தால் ஓர் கானம்

கருவிழியை மையாக்கி , நரம்புதனை தந்தியாக்கி யாழென சமைத்து

படைத்தாள் ஓர் கானச் சரம்..

இனிய புனல் அருவி தவழ் இன்ப மலைச் சாரலிலே..

கனிகுலவும் மரநிழலில் கைப்பிடித்து உகந்ததெல்லாம்

கனவு தானோடி, சகியே, நினைவு தானோடி..

கண்டோம் கண்டோம்! கண்ணுக்கினியன கண்டோம்

கேட்டோம் கேட்டோம் காதுக்கு இனியன கேட்டோம்!

தேனினுமினிய கானத்தின் ஊடே கலந்திருந்தாள்

நந்தினி ஓர் துளி ஆலகால விடம்

காரிருள் சூழ்ந்தது

வேளை குறித்தாள் நந்தினி! அவள் வலை சேர்ந்தான் ஆதித்தன்

கொடுவாளே! உன் பலி காலம் நெருங்கியது

சோழனின் கலிகாலமும் நெருங்கியது..

அவனை யானே கொள்வேன்! வேங்கையின் குருதி சுவைப்பேன்

அல்லால், என் உயிர் துறப்பேன்!

கலைந்தன நினைவுகள், மேகலை அவ்விடம் புக

மான் விழிகள் மருண்டன கொலைவாள் கண்டு

பின் உரைத்தன ஓர் கொடுஞ்செய்தி

மறைந்தார் பழுவேட்டரையர் வெள்ளத்தில்!

இறுமாந்தாள் நந்தினி உள்மனதில்...

ஈன்றாள் அதிலும் ஓர் கொலைத் திட்டம்

தேன் பொழிந்தாள் மேகலையிடம்

அமிலத் தேன் பொழிந்தாள் அக்குவளையிடம்

உன் தமயன் கள்வன்! பல்லவன் தூர்த்தன்!

இதுவே உனது தாரக மந்திரம்..

அனைத்தும் யாம் அறிவோம்!

உன் மணாளனும் இப்போது பேராபத்தில்

ஏகிடு அவன் இடம்.. அவனே ஓர் வீரன் இவ்விடம்

செல்லச் சொல் என் மணாளனின் வாசம் தேடி

அவரே என் உயிர் நாடி..

ஆதித்தனின் மனம் கண்டு

உளம் கலங்கி நின்றான் வாணன், வந்தியத் தேவன்

ஓர் குரல் கலைத்தது அவன் மௌனம்..

ஆ!! பிசாசு!! மேகலையின் தேன் குரலில் ஓர் கொடுஞ்சொல்

அடியே சகி! கண்டேன் ஓர் அரக்கனை

பதறுது உள்ளம்.. என் செய்வேன்! யான் ஏது செய்வேன்!

சந்திரமதி! தேடடி என் பதி..

அல்லித் தடாகம்.. அதன் மேலே கருங்குவளை

நெருங்கி வந்தது ஓர் வண்டு! நாணிச் சாய்ந்தது அக்குவளை

மடிதுவளும் மலர் சாய்ந்து நீர் குடிக்கா வரம் வேண்டி

ஏந்தினான் வாணன், வந்தியத் தேவன்


ஊடலுடன் விழி திறந்து, காதலுடன் மொழி பகர்ந்தாள்

மான்விழியாள், கார்குழலாள்

அன்பே! உங்கள் உயிர் காக்கத் துடிக்கிறதென் இதயம்

அந்த வரம் தந்தால் பிழைப்பேன் அக்கணம்


யான் வீரன்! செல்வேன் காலன் இடம் தேடி

அவன் கொலை வாள் நாடி!

இட்டுச் செல்லடி என் தோழி.. அவ்விடம் எனை இட்டுச் செல்லடி என் தோழி

நரகம் வழி நடந்தான் வாணன்

தன் காதலன் கரம் பற்றி சொர்க்க திசை தேடி நடந்தால் மேகலை

அன்றொரு மாலை கன்னியவள் கன்னம்தனில் இதழ் பதிக்கக்

காதலன் முயன்றிட்ட வேட்டை மண்டபம்

அவ்விடம் முழுக்க கொலையாளிகள் கூட்டம்

காதலன் இன்னுயிர் காக்கத் துடிக்கும் மேகலை

சோழன் கருவறுக்கச் சீறும் நந்தினி

பழி தடுக்கப் பாயும் வாணன்

சொற்போர் தொடங்கியது அங்கே!

ஏனை விற்போர் தோற்கும் அதன் முன்னே

கணைகள் பல தொடுத்தான் வாணன்

கரு நாகம் அவள் உள்ளமும் கலங்கியதோ!!

பனித்தன சுடர் விழிகள் ரெண்டும்

சட்டெனக் கலைந்தது சபை


Monday, 22 February, 2010

ஏன்??

என் நெஞ்செல்லாம் காதல் நிரப்பி கண்முழுக்க வண்ணக் கனவுகளும் தெளித்துப்
பின் நெருப்பில் தள்ளியதேன் என் கண்ணே!!
கனவில் நான் கண்ட காட்டாறு கானலாய்ப் போனதேன்?
யாக்கையை இறகாக்கிக் குருதியை மையாக்கி நான் வடித்த கவிதைகள் யாவும்
நீர்த்துப் போனதேன்?
நாளொரு நீயும் இரவொரு விண்மீனுமாய் நான் வளர்த்த காதல்
காற்றில் கலந்ததுமேன்?
நிதமொரு துளியாய் நான் சேர்த்த நம்பிக்கைக் கூடு சிதைந்ததுமேன்?
சட்டென ஓர் கணத்தில் என் வாழ்வே பொய்த்துப் போனதுமேன்?
உயிர் முழுக்க நீயிருக்க வெறும் கூட்டில் நடைபிணமாய்
எனக்கிந்த வாழ்வும் ஏன்??
விழிவழிஒழுகும் கண்ணீரில் என்னுயிர் இன்னும் கரைந்து போகாததேன்!?
நீ மாற்றான் மனையாள் என்றறிந்தும் என்குலை இன்னும் அறுந்து போகாததுமேன்!??
ஒழிந்தான் ஓர் கவி!!!
வாழ்க பல்லாண்டு...

மரணம்

மூச்செல்லாம் "என் தேவதை" எனும் பதம் இருக்க
எப்படிச் சொல்வேன் அதை நிறுத்தும் படி!

வியர்வையின் வலி விளைச்சலில் மறந்து போம்!
கலைஞனின் வலி கைத்தட்டலில் மறந்து போம்!
தாயின் வலி, பிள்ளையின் முதற் கதறலில் மறந்து போம்!
காத்திருப்பின் வலி, காதலியின் வருகையில் மறைந்து போம்!
கண்ணே! நீ வராமலே போனதன் வலி எங்ஙனம் மறந்து போம்!!!
என் கல்லறையிலேனும் சொல்லிடு உன் பதிலை....Tuesday, 16 February, 2010

வாழ்வியலில் காதல்!!!!

நம் சுந்தரம் பிள்ளை ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். எந்நேரமும் புலம்பலிலேயே இருப்பது அவரது வாடிக்கை. சிலர் மதுவில் போதை காண்பர். நம் சுந்தரம் பிள்ளையோ, புலம்பலில் போதை கொண்டு மயங்கிக் கிடந்தார். எந்நேரமும் எதையாவது எண்ணி பயந்துகொண்டே இருப்பது அவரது வாடிக்கை. வேலை இன்றி அலுவலகத்தில் சும்மா இருந்தால், ஐயோ! நம்மை வேலையை விட்டு துரத்தி விடுவார்களோ,!? என்று பயப்படுவார். வேலை கொடுக்கப்பட்டால், ஒன்று சோம்பி திரிந்து தாமதம் செய்வார், அல்லது, சே! என்ன இவ்வளவு வேலை என அலுத்துக் கொள்வார்.. அவரது முகம் கடு கடுவென்று இருக்கும்! சரி, அப்படியாவது வேலையை நல்லபடியாய் முடித்து கொடுப்பாரா என்றால், அதுவும் இல்லை.. இந்த அலுப்பிலும் கடுப்பிலும் செய்யும் வேலை எப்படியிருக்கும்! ஏகப்பட்ட பிழைகளுடன், பலமுறை திருத்தல்களுக்கு உட்பட்டு அந்த வேலை படாத பாடு படும்...

சுந்தரம் பிள்ளையின் பிரச்சனை என்ன!! தனக்கு வேலை இருக்கிறது அல்லது இல்லை என்பதல்ல.. இந்த உலகத்தில் தனக்கு மட்டுமே இப்படி நடக்கிறது என்று என்னும் எண்ணம்தான். ஐயோ!! எனக்கு மட்டும் வேலையே தரவில்லை.! நான் ஒழுங்காய் வேலை செய்வதில்லையோ!! இப்படியெல்லாம் வீண் புலம்பலிலேயே காலத்தை கடத்துவது என்றும் நம் முன்னேற்றத்துக்கும் மன மகிழ்வுக்கும் வழி வகுக்காது.. மாறாக, வீண் மனக் குழப்பங்களுக்கும் நிம்மதியின்மைக்கும் தான் காரணமாய் இருக்கும்.

நம் சுந்தரம் பிள்ளைக்கு எப்போதும் ஒரு மனக்குறை! கடவுள் ஏன் நாம் விரும்புவதெல்லாம் கொடுப்பதே இல்லை!! நான் ஒரு எறும்புக்குக் கூட தீங்கிழைத்ததில்லையே என்று! இதெல்லாம் எங்கே அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்!!நல்ல பட்டப் படிப்பு முடித்து விட்டு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது.!! கேட்பதற்கும் மேலேயே கொடுத்தால் கடவுள் கூட தீயவராய் தெரிகிறார் பாவம்!!

ஒரு முறை அவர் வேலை செய்து கொடிருக்கும்போது, எதிர்பாராத விதமாக, அவர் குழும நண்பரால் வேலை செய்ய முடியாமல் போக, இவரே மொத்த வேலையும் செய்ய வேண்டியதாய் இருந்தது! அதில் அரை பங்கு வேலை மற்றொரு அரை பாக வேலையின் பிரதி என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ந்தார் சுந்தரம்.சடாரென அடுத்த ஒரு சிறிய பகுதியை செய்து கொண்டிருந்த போது சே! என்ன இது இதில் ஒன்று கூட பிரதியாய் இல்லையே என்று கடவுளை மறுபடியும் வசை பாடத் தொடங்கினார்!!

அவர் மொத்தமாக செய்ய வேண்டிய வேலையை பாதியாய்க் குறைத்த கடவுள், ஏன் திடீரென்று கெட்டவராய் மாறிப் போனார்! அவர் மாறவில்லை! சுந்தரம் பிள்ளையின் மனம்தான் அவரை மாற்றியிருக்கிறது!! ஆக, மனம் ஒரு மாயக் குரங்கு என்று பெரியவர்கள் சொன்னதை இங்கே கண்கூடாகப் பார்க்கமுடிகிறது அல்லவா... முதலில் எதுவுமே கிடைக்கவில்லை என ஏங்கும்.. தேவையான அளவு கிடைத்த பின்பு, இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என ஆசைப் பட்டுக் கொண்டே இறுதியில், ச்சே! என்ன இது! இவ்வளவு வந்து விட்டது! இன்னும் கொஞ்சம் கூட வந்தால் தான் என்ன!? என நினைக்கும் போது தான் பல குறுக்கு வழிகளையும் தேடத் தொடங்கி பின் உள்ளதும் போய் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது.!!

எனவே, இந்த நிமிடத்தை அனுபவித்து வாழுங்கள்! உங்களுக்கு விதிக்கப்பட்ட எந்த வேலையையும் ஒரு காதலுடன் செய்ய முயலுங்கள்!! வீண் கற்பனைகளைத் தவிருங்கள்...உங்கள் உழைப்பின் மீதும் கடவுளின் ஆசி மீதும் நம்பிக்கை செலுத்துங்கள்..எந்த நிலையிலும் மனதை அமைதியாய் வைத்த்திருக்க முயலுங்கள்..சுகமோ,துக்கமோ,எந்த உணர்ச்சிவசமான நிலையிலும் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்காதீர்கள்! அது தவறாய்ப் போவதற்கு தான் வாய்ப்பு அதிகம்..

வாழ்க்கை என்ன! வானம் கூட உங்கள் வசப்படும்...

Monday, 1 February, 2010

மணிமேகலை....4

மணிமேகலையின் கொடுங்கனவு

சிவபக்தியில் சிறந்த மதுரந்தகனா

அல்லால், எதிரிகளை வதம் செய்த ஆதித்தனா!?

சொல்லடி கண்ணே உன் மனம் நாடும் காளையை!?

அவர்க்கே உன்னை மனம் முடிப்பேன்..

வலைவிரித்தது நந்தினி எனும் நாகம்,

கள்ளமில்லா மேகலைக்கும்

நாணத்துடன் மனம் திறந்தாள் மணிமேகலை

தேவதை என்றெண்ணி நாகத்திடம்..

நாடாளும் வேந்தன் வேண்டேன்!

சிவனை நாடும் பதியும் வேண்டேன்!

மனம் பறித்திட்ட காதலன் உள்ளான்!

என் உள்ளத்தின் உள்ளே சயனம் கொண்டான்..

என் கனவெல்லாம் அவனே! நேற்று முதல் நினைவிலும் அவனே!

உயர்ந்தன நந்தினியின் விற்புருவங்கள் ஓர்கணம்

மனதிற் தேக்கிய வன்மத்துடன் பூத்தாள் ஓர் புன்னகை

கண்ணே நீ கூறும் காதலன், உன் மனம் திருடிய நற் திருடன்

மூவேந்தரும் போற்றும் வாணன், அவன் வந்திய தேவன் அல்லவோ!??

தன் அம்பொன்று திசைமாறிய அர்ச்சுனனைப் போல் வியந்தாள் மேகலை!

நம்பித் தொலைத்தாள் நந்தினியை..

கனவில் வந்த கணம் முதல் முத்தமிட வந்த நொடி வரை

அனைத்தும் சொல்லி முடித்தாள் விக்ரமாதித்தன் கட்டிற் பதுமையென

அகன்றாள் அவ்விடம் விட்டு.. நிம்மதியாய்..

அறைக்குள் ஓர் முழுமதியாய் உறங்கி இருந்தாள் சம்புவரையர் குலமகள்

தேவதை இடம் நாடி வந்தான் அவள் காதலன்..

என்றும் போல் நிலவில் நடைபழகிட யத்தனித்தாள் மேகலை

சட்டென வந்தான் ஓர் கொடுங்காளை..

காதலியைக் காண கத்தியின்றி வந்திட்ட வந்தியத்தேவனைக் கொல்ல

ஓர் கொலை வாளுடன்.. அய்யகோ! மணாளா!! அவனை யானே கொல்வேன்..

வீரிட்டோடினாள் புலியை புறம் காணச் செய்த மறத்தமிழச்சி

அவன் முகம் கண்டாள்! உறைந்தாள்!

உயிரிலும் மேலான தமையன்! மாபெரும் வீரன், அவன் கந்த மாறன்..

சட்டெனக் கலைந்தது கனவு.. !!


ராஜ சிம்மம்


மாகடலும் மடுவாய்த் தோன்றும்

அந்த ஜனத்திரளின் முன்னால்..

அவ்வளவும் சம்புவரையர் இல்லம் முன்னால்...

பார்போற்றும் வேந்தர், சுந்தர சோழர்

ஈன்றெடுத்த கருஞ்சிறுத்தை

வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி..

ஐம்பூதங்களும் ஒருங்கே உருவெடுத்து வந்த தேவன் போல்

வந்தான் கரிகாலன்..

நுழைந்தான் நாகப் புற்றினுள்..


ஆட்டி வைத்த சூத்திரியும்

ஆடிக்கிடந்த பொம்மைகளும்

அதிர்ச்சியில் உறைந்தன ஆங்கே!

கருஞ்சிறுத்தையொன்று கக்கிக் கொண்டிருந்தது கொடும் விடம்

நந்தினியி னுடன் இருந்த சிறு தொடர்பின் விளைவோ!

விதியென்னும் எவர்க்கும் புரியா இறையோ!

யாமறியோம்...


சோழனவன் குலம் அறுக்க ஓர் நாகம்

கயல் விழியாள் துணை நாடும் கஜேந்திரன்

மகளை ராணியாக்கி அரசாளத் துடிக்கும் குள்ள நரி

இவை யாவும் நாட்டில் இருக்க, காடு சென்றான் ஆதித்தன்

வேட்டைக்கு உடன் சென்றான் உயிர் நண்பன்..


பாம்பின் கால் பாம்பறியும்..

இங்கோ நந்தினியின் காலை இவ்வேங்கையும் அறிந்தது..

உளம் பதைத்தது.. தம் தோழனிடம் மனம் திறந்தது..

உயிர் காப்பான் தோழன்! என் உயிர் ஈந்தேனும் காப்பேன் உம்மை..

உறுதியுரைத்தான் வாணன், வந்திய தேவன்