Monday 28 September, 2009

விழியிரண்டும் கவிபேச
புன்னகையால் பூ பூக்க
மனதோடு மழைச் சாரல்
சாலையோரம் நீ சென்றால்
சிறகடிக்கும் என் இதயம்
என் வாசல் நீ வந்தால்
இதோ எந்தன் தேவதை
என கால்கள் குதிக்கும்
புதிதாய்ப் பூக்கும் காதல்
ஒவ்வொரு முறை
உன் பெயரை நான்
(சு) வாசிக்கும் நொடியில்!!!

Tuesday 22 September, 2009

சொல்லப்படாத என் காதலின் கிழிக்கப்பட்ட காதல் கடிதங்களின் நாயகியே நெஞ்சோடு கலந்து விழியோடு உறைந்து குருதியில் மிதந்துகொண்டிருக்கும் உன் நினைவுகள் எங்கு காணினும் உன் பிம்பங்கள் என் உயிரின் யாதுமானவள் நீ கண்ணீர் முட்ட இதயம் விம்ம நான் வடிக்கும் இன்னும் ஓர் மடல்.. வழக்கம்போல் மூடப்பட்ட உன் இதயக்கதவுகளால் ஏமாந்து என் கல்லறையில் அடக்கம் செய்யப்பட இப்போதே தயாராய் நான் பார்க்கும் ஒவ்வொரு காதல் கதையும் உன்னையே நினைவு படுத்துகிறது கண்மணியே. என்ன செய்ய!! அனைத்தும் நடந்திருக்கிறதே என் காதலிலும்.. உன் அகன்ற விழிப் புன்னகையில் நான் மயங்கிய அந்த முதல் கணம் முதல், மகிழ்ச்சியையும் சோகத்தையும் குறைவின்றி நான் கண்டிருக்கிறேன். இன்றும் உன் நினைவு என்னுள் ஒவ்வொரு நொடியிலும் புன்சிரிப்பையும் அதனுள் புதைந்த வலியையும் ஒன்றாய் விதைத்துவிட்டே செல்கிறது. நான் சிந்திக்கும் ஒவ்வொரு கருத்தையும், நான் காணும் சிறுசிறு சந்தோஷத்தையும், வலியையும் உன்னுடன் பகிர்ந்துகொள்ளவே துடிக்கிறேன். என்ன செய்வது!! நானோ சாமான்யன், நீயோ தேவதைகளின் தேவதையாயிற்றே. உன் கைகோர்த்து மணலில் கால்புதைய நடந்து என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உன்னுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசை இப்படி நிராசையாகவே நிலையாய் மாறிப்போகும் என்று தெரிந்திருந்தால், அன்றே முயன்றிருப்பேன் உன் கவனம் ஈர்க்க.. இதற்குமேல் எழுத முடியாது என் மனம் என்னைக் கொல்கிறது..வழக்கம்போல் இன்றும் பாரத்தை உன் மேலேயே போட்டுவிட்டு நான் செல்கிறேன்..

Tuesday 8 September, 2009

நினைவில்லா இன்னோர் இரவு...

இரவின் நிலவு
உச்சி வானில் நிலத்துவிட்டபின்
ஒளி பீய்ச்சும் தானியங்கி இருசக்கர வாகனிகள்
கவலைகள் மறந்து (மறைத்து)
தத்தம் இரவுநேர தோழிகளுடன்
பறந்து கொண்டிருக்கும்
இன்னுமோர் இனிய நள்ளிரவு...
வழக்கம் போல்
தனிமையாய் நான்
தலைகலைந்து
மங்கிய விளக்கின் மஞ்சள் ஒளியில்
இளையராஜாவை மட்டும்
துணையாய்க் கொண்டு
அவளை எண்ணி பிதற்றும்
இன்னுமோர் இரவு
என்று விடியும் என் இரவு!!
என்றும்போல் கண்முன் நிற்கும்
மேலாளர் என்னை தூங்கச் சொல்கிறார்...
அவளோ என் இருவிழி இமைகளுக்கிடையில்
அதே மோகனப் புன்னகையுடன்...
என்றும்போல் இன்றும் பிறக்கிறது
காரணமின்றி விரல்களின் நுனியில்
ஓர் முடிவு தெரியா க(வி)தை

நீயின்றி நானில்லை

நீயின்றி நானில்லை
நினைவுறுத்தும் ஒவ்வொரு கணமும்
விழி மூடினால் உன் விழி
மலர் கண்டால் உன் புன்னகை
நிலம் கண்டால் உன் வெட்கம்
நிலவு கண்டால் உன் முகம்
மனம் மகிழ்ந்தால் கண் கசிந்தால்
என்னருகில் நீ இல்லா நரகப் பூமி
ஒவ்வொரு கணமும் என்னைக் கொல்லும் என் அன்பே!!!
இனியும் ஏன் தாமதம்!!!
என்னை உயிர்ப்பிக்க வாராயோ!!!

Saturday 5 September, 2009

ராஜபாட்டை

My First Story... Incompleted Yet... :)
அதி காலை.. கதிரவன் இன்னும் தன் செங்கதிர்களை புவியின் மீது செலுத்த தொடங்காத நேரம்... பழந்தமிழ் நாட்டின் வஞ்சி மாநகரை ஒட்டிய ஒரு ராஜபாட்டை ஏனோ திடீரென்று சலசலப்புக்கு உள்ளாகின்றது... தங்கள் உறக்கத்தை கொள்ளையடித்து யார் என ஆங்காங்கே உள்ள மரங்களிலிருக்கும் புறாக்களும் வணம்படிகளும் இன்னும் பல்வேறு வகையான பறவைகளும் தத்தம் கூட்டை விட்டு சற்றே எட்டி பார்க்கின்றன.. நாமும் சற்றே உற்று பார்ப்போமா..? இதற்காக நாம் அனைவரும் இன்றிலிருந்து சுமார் 850 வருடங்கள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்..
சற்றே உட்ட்ருபார்தல் ஒரு குதிரையின் குளம்படி ஓசை கேட்கின்றது.. அப்பப்பா என்ன ஒரு வேகம் அதன் ஓட்டத்தில்.. அதன் பாதங்கள் தரையில் படுகின்றனவா என்றே தெரியவில்லையே.. அதன் வேகத்தை பார்த்தல் அது தன் எஜமானரை ஒரு பெருமையுடன் ஏற்றி செல்வதை போல அல்லவா உள்ளது... அத்தகைய பெருமைக்குரிய எஜமானரை நாம் பார்கின்றோமே.. வியப்பு மேலிடுகின்றது.. ஏனென்றால் அவர் ஒரு 16 வயது மதிக்கத்தக்க இலங்காளையாக அல்லவா இருக்கின்றான்..அவன் முகத்தில்தான் எத்துனை சாந்தமும் சௌந்தர்யமும் கொஞ்சி விளையாடுகின்றன.. இவன்தான் நம் கதையின் நாயகன் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது அல்லவா..
அந்த குதிரை முன்னோக்கி செல்லும் போதே அதை செலுத்தும் நம் கதைநாயகனின் மனதும் எண்ணங்களும் பின்னோக்கி செல்கின்றன.. சற்றே பெருமூச்சொன்றை செரிகிறான்.. இப்பயணத்தை அவன் மேற்கொள்ள காரணமாயிருந்த அந்த நிகழ்வை பற்றி எண்ணமிடுகிறான்.
அவன் தந்தையின் இறுதி அவா அது.. அவன் சோழ நாட்டுக்கு சென்று தன் புகழை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பது.. அதன் உட்காரணம் புரியா விட்டாலும் தந்தையின் இறுதி ஆசையாய் நிறைவேற்ற புறப்பட்டிருக்கும் இவன்.. அறிஞ்சயலாதன்.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூவேந்தருள் ஒருவரும், இளங்கோவடிகள் எனும் மாபெரும் கவிஞனை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்துமான சேர குல வாரிசு.. கடைசி வாரிசு..
சட்டென பறவைகளின் கீச்சுக்குரல் கேட்டு அரிஞ்சயனின் மனது நிகழ் காலத்திற்கு திரும்புகின்றது.புரவியை விரைவாக செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் விரைகிறான்.. அவன் செல்லும் ராஜபாட்டை தஞ்சை செல்லும் ராஜபாடயுடன் இணைகின்றது.. நம் நாயகனும் மனதிலுள்ள பழைய எண்ணங்களை முற்றிலுமாக அழித்துவிட்டு விரைகிறான்..
அன்று பகல் சுமார் 12 நாழிகைக்கெல்லாம் சோழர்களின் முதல் தலைநகராகிய உறையூரை அடைந்தான். அங்கு இருந்த ஒரு வைணவ மடத்தில் பகல் உணவை முடித்துக்கொண்டு பயணத்தை தொடர்கிறான்.. எவ்வளவு வேகமாக குத்ரையை செலுத்திய போதும், அவன் தசையின் எல்லையை தொடும்போது நள்ளிரவாகி விட்டது.. அப்போது கார்காலம்ஆதலால் , மழை பிடித்துக்கொள்ள தொடங்கி விட்டது.. மனம் தளர்ந்த நம் நாயகன் மழைக்கு ஒதுங்குவதற்காக கட்டப்பட்ட ஒரு சாலையோர மண்டபத்தை நெருங்கினான்.
குதிரையை மண்டபத்தின் அருகில் இருந்த ஒரு புளிய மரத்தில் கட்டி விட்டு மண்டபத்தின் உள்ளே செல்ல எத்தனிக்கும் போது, உள்ளே விசித்திரமான பேச்சுக்குரல்கள் கேட்கவே, உற்று கவனிக்கிறான்.
ஒரு குரல் அதிகார தோரணையில் கேட்கின்றது.. "இடும்பா, சோமா என் திட்டத்தை நன்கு புரிந்து கொண்டீர்கள் அல்லவா? இதோ இதுதான் சோழர் குலத்தை நாளையோடு இல்லாமல் ஆகபோகின்ற ஆயுதம்.. ஹா ஹா பல போர்களில் தோள் வலி காட்டிய ஆதித்தனின் கதையை முடிக்க போவது ஒரு வெண் சாமரம் என்பதை வரலாற்றில் பின் படிக்க போகும் ஒரு சாமான்யன் கூட நம்ப யோசிப்பான் அல்லவா..ஆனால் அதுதான் நடக்க போகின்ற நிதர்சனமான உண்மை. இந்த வரைபடம் அதை உங்களுக்கு தெளிவாக விளக்கும்.
இதோ இருக்கின்றது பார் வென்சாமரத்தின் அடியில் ஒரு வெள்ளி குமிழ், இதை ஒரு முறை வலப்பக்கமாகவும், இரு முறை இடபக்கமாகவும் சுற்றினால் அப்டியே கழன்று விடும். அதன் அடியில்தான் நாக சர்பத்தின் விஷத்தை விட கொடியதொன்றை தோய்த்து வைத்துள்ளேன்.. நாளை காலை ஆதித்தன் சிரசில் திமிர் பிடித்த சோழர் குல கிரீடம் ஏறும் அரை வினாடிக்கு முன்பாக அவன் மார்பில் இந்த வாள் பாயும், அதே நேரத்தில் அரண்மனையில் மறைந்திருக்கும் நம் போராளிகள் வெளிவந்து முடிந்தவரை வெட்டி சாய்ப்பார்கள். " அரசே, மன்னிக்கவும்! உங்கள் திட்டத்தில் குறை கூறும் அளவுக்கு எனக்கு புத்தி இல்லை.. இருந்தாலும் ஒரு சந்தேகத்தை மட்டும் விளக்குமாறு வேண்டுகிறேன். அரசனுக்கு வெண் சாமரம் வீசுபவன் வெளி ஆட்கள் யாரையும் சந்திக்க அனுமதிக்க படுவதில்லையே? " "இடும்பா, இந்த திட்டமும், அந்த வெண்சாமரமும் இரண்டு வருடங்களுக்கு முன்னரே சோழர் அரண்மனையை அடைந்து விட்டன..
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் அந்தி பொழுதில், சோழ சக்கரவர்த்திக்கு சாமரம் வீசும் கந்தன் புலி அடித்து இறந்து போனான்.. ஆனால் உண்மையில் அவனை அடித்தது புலி அல்ல.. கயல்.. வீர பாண்டியனின் மரணத்திற்கு சோழ ரத்தத்தை 300 ஆண்டுகளாக பழி கேட்கும் கயல்.. ஹா... ஹா.." வெளியில் இருந்து இந்த உரையாடல்களை கேட்டு கொண்டிருந்த அரிஞ்சயனின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தி விட்டது போல் உணர்ந்தான்.. ஒரு கணம்தான், பின்பு மின்னல் வேகத்தில் அவன் மனது சில கணக்குகளை செயல்படுத்தியது.. கையில் இருந்த வீரவேலை உறுதியாகப்பிடித்தவாறே உள்ளே இருந்த அந்த மூவர் மீதும் பாய்ந்தான்.. அந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிபாராத அந்த மூவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் சுதாரித்து கொண்டனர். அந்த மூவருடனும் துவந்த யுத்தம் புரிந்தான் அரிஞ்சயன்.
அவர்கள் மூவராயினும், ஆயுதம் இல்லாத காரணத்தினாலும், அரிஞ்சயனின் வீரத்தாலும் விரைவில் களைப்படைந்தனர். அதே நேரத்தில், அவனும் களைப்படைந்திருந்தான்.. என்ன செய்வது என்று மனதில் ஒரு முடிவுக்கு வந்தவனை போல, அவர்களை வேகமாகவும் வலுவுடனும் தாக்கத்தொடங்கினான். இதில் இடும்பன் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்தான்.. அரிஞ்சயனும் அவனை நோக்கி பார்க்கவே, அந்த கண நேர கவனச் சிதறலை தமக்கு சாதகமாகி கொண்டு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல பறந்து கானகத்திற்கு இடையில் மறைந்தனர் மற்ற இருவரும். அவர்களை துரத்த எத்தனித்த அரிஞ்சயன், பின் அதை வீண் என உணர்ந்தான். ஏனென்றால், இது அவர்களுக்கு பல ஆண்டுகளாய் பழக்கப்பட்ட காடு, இதில் நுழைந்து அவர்களை பிடிப்பது அந்த பிராந்தியத்திற்கே புதியவனாகிய அவனால் முடியாத காரியம்.
ஆகவே, மயங்கி கிடந்த இடும்பனை அவன் மேலாடையாலேயே இறுக கட்டி, தன் புரவி மீது ஏற்றினான்.. பின்பு தஞ்சையை நோக்கி விரைந்தான்..
அதி காலை இரண்டரை நாழிகை.. நம் வீரன் தஞ்சை மாநகரின் எல்லையை தொடுகிறான்.. வியப்புடன்.. என்ன ஒரு விந்தை.. இந்நகரின் நெடிதுயர்ந்த மாளிகைகளும், சாலையோரம் நிழல் தரும் மரங்களும், அவற்றில் வசிக்கும் இளம் பறவைகளும் இந்த பரபரப்பான மன நிலையில் கூட நம்மை ரசிக்கத்தூண்டுகிறதே..
இவ்வாறு எண்ணமிட்டு கொண்டிருக்கும் போதே அவன் குதிரையின் ஓட்டம் எதனாலோ தடைபடுகின்றது.. தான் வேல் பிடித்த வீரர்களால் சூழபட்டிருப்பதை உணர்கிறான். அவர்களுடன் போர் செய்வது வீண் என உணர்ந்த அவன் அவர்கள் கட்டளைக்கு இணங்கி அவர்களோடே செல்கிறான்.. அவர்கள் அவனை சாலையிலிருந்து ஒரு அரை காத தூரத்தில் இருந்த ஒரு முகாமிற்கு அழைத்து செல்கிறார்கள்.
முகாமிற்கு உள்ளே, சரித்திரத்தில் அந்த காலகட்டத்தில் பரத கண்டத்திலேயே அதிபுத்திசாலிகளில் ஒருவராக மதிக்கப்பட்டவரும், சோழர் குலத்திற்கு வழிவழியாக தொண்டு செய்து வருபவருமாகிய அன்பில் அநிருத்த பிரம்மராயர் வீற்றிருக்கிறார்..
சோழர்களின் புதிய தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவாக கட்டப்பட்டு கொண்டிருந்த சோழீச்வரர் திருக்கோவில் கட்டுமானத்திற்காக தஞ்சை பிரகதீஸ்வரத்திற்கு விஜயம் செய்திருந்தார் அநிருத்தர். அவர் ஒரு அரசியல் ஆலோசகராக மட்டுமின்றி, சோழர்களுக்கு ராஜ்யபாரம் அல்லாத பல காரியங்களிலும் முதுகெலும்பாக திகழ்ந்தார். அதே போல், அரசியலில் மட்டுமல்லாது கட்டடக்கலையிலும், போர்க்கலையிலும் வல்லவராக இருந்தார்.
ஆகவேதான் தஞ்சையில் இருந்து சில நுணுக்கமான குறிப்புகள் எடுத்துச்சென்று கங்கேஸ்வரர் கோவில் கலைச்சிற்பங்களை மெருகேற்ற இங்கு வருகை புரிந்திருந்தார். அவ்வாறு தான் எடுத்த குறிப்புகளை ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்த வேளையில்தான் வெளியே சில சலசலப்புகளை கேட்டார். அதனால் எரிச்சலுற்றவராக வெளியே வந்த அவர், 18 வயது மதிக்கத்தக்க வாலிபன் பத்து சோழ வீரர்களுடன் தனிஒருவனாக மல்லுக்கட்டிக்கொண்டிருந்ததை கண்டார். அவன் குதிரையில் ஒரு 35 வயது மதிக்கத்தக்க ஒருவன் மயக்க நிலையில் கைகால்கள் கட்டப்பட்டு கிடப்பதையும் கண்டார். அநிருத்தர் வெளியே வந்ததைக் கண்ட அந்த வாலிபனும் உடனடியாக அவர் முன்னாள் வந்து தலைவணங்கி நின்றான். அவர் என்ன என்பதைப்போல பார்க்க, அவனும் நடந்தவற்றை விபரமாகக் கூறலானான்.
அதைக்கேட்ட அவர், பரபரப்புடன் வீரர்களை பார்த்து மயக்கமுற்று கிடந்தவனை கொண்டுவரச்சொன்னார்.
அதைக் கேட்ட வீரர்கள் உடனடியாக அவனைக் கொணர்ந்து அநிருத்தர் முன்னாள் நிறுத்தினார்கள். நம் வீரனின் புஜபல பராக்ரமத்தால் அவன் இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்கவே, தீப்பந்த ஒளியில் அவன் முகத்தையாவது பார்க்கலாம் என எண்ணியவாறே, அவன் முகத்தைப் பார்த்த அநிருத்தரின் உதடுகள் தன்னிச்சையாக "இடும்பனா!!!" என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தின.. புஜங்கனின் ஒவ்வொரு மன அசைவையும் தெள்ளத்தெளிவாக படிக்க முடிந்த அவருக்கே இந்த திட்டம் புலப்படாத தோல்வி அவரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. உடனடியாக அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்கள் அவர் மனதில் தோன்றி மறைந்தன.
நம் வாலிபனைப் பார்த்து, யாரப்பா நீ ? சோழ தேச ஒற்றர்கள் செய்ய வேண்டிய காரியத்தை தனியொருவனாக சாதித்திருக்கிறாயே!!
ஒருகணம் யோசித்த நம் வீரன், நான் அரிஞ்சயன், சேர நாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்திருக்கிறேன், வரும் வழியில் இவர்கள் பேசிய தகவல் எனக்கு அதிர்ச்சி ஊட்டவே, இவர்களை இங்கு அழைத்துவந்தேன் என்றான்...

பெண்ணே உன்னைக் கண்டதே

பெண்ணே உன்னைக் கண்டதே
வாழ்வின் அர்த்தமோ..
என்றே தோணுதே
கண்ணே.. உன்னைக் கண்டதும்
இதயம் சிதறவே.. புதிதாய்ப் பிறந்தேனே
என் கனவே
உனைச் சேரும்
நாளென்றோ அறியேன் நானடி
உனைத் தேடி
கரம் கோர்க்கும்
திருநாளில் உயிர்ப்பேன் நானடி
கிழக்கிலே தோன்றும் ஆதவன்
மேற்கில் உதித்திட்ட நாளிலே
என் கண்களில் நீயும் விழுந்திட்டாய்
பார்வை ஒன்றிலே கொன்றிட்டாய்
என்ன்னுள்ளே நீ வந்தாய்
என் வாழ்வின் பொருளானாய்
(Tune: Ondra Renda from KAKHA KAKHA)

நதியே கடலே மலையே வெயிலே அவளைக் கண்டாயா

கண்கள் கண்டேன்
காதல் கொண்டேன்
அன்றே அவளை மணந்தேன்
சுவாசம் முழுதும் அவளே இருக்க
தினம் பிறந்தேன்
தொலைதூரம் சென்று விட்டாள்
என் இதயம் தின்று விட்டாள்
மனம் வாட பெண்ணை நாட
என் உயிரும் தொலைகிறதே
நதியே கடலே மலையே வெயிலே
அவளைக் கண்டாயா
என் உயிரை உருவி
உடனே மறைந்த மலரைக் கண்டாயா!!
(Tune: Vizhi moodi from AYAN)