Saturday, 23 May, 2009

Angel, for a change
without wings but glitters
in eyes and love in heart
with roses in hand
happiness she will bring
in my life and there she is..
on the way down to earth
right from heaven...

Thursday, 21 May, 2009

தீபாவளிக் காலை

அம்மா தலைக்கு எண்ணெய் தேய்க்க
அப்பா புத்தாடைகளுக்கு மஞ்சள் பூச
ஏதோ ஒரு டிவியில் சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் பார்த்து சிரித்துக் கொண்டே
அழகாய்ப் போன தீபாவளிக் காலையில்
சட்டென நண்பன் குரல்..
மச்சி எந்திரிடா, சீக்கிரம் ஆபீஸ் போகணும்
இன்னைக்கு கோட் சப்மிசன் டே...
தொலைத்த சந்தோஷங்களை மனதுக்குள் தொலைத்துக் கொண்டே
நண்பனுடன் ஆபீஸ் கிளம்பினேன் என்றும் போல..
அவன் கடைவிழியிலும் ஒருதுளிக் கண்ணீர்!!!!

Tuesday, 5 May, 2009

காதலாம்...

காதலாம்... 
அண்ணலும் நோக்கினாராம் 
அவளும் நோக்கினாளாம்... 
பெற்ற தாய் தந்தை வேண்டாம் என்றாய்... 
உற்ற தமையனையும் வேண்டாம் என்றாய் 
காதல் ஒன்றே போதும் என்றாய்...  
எங்கள் இதயங்களின் கல்லறைமீது
வீடு கட்டி வாழும் அன்புத் தங்கையே... 
வாழ்க நீ பல்லாண்டு...

Sunday, 3 May, 2009


பெண்ணே,  
என் வாழ்வின் எல்லாமாகவும் இருப்பவள் நீதான்
என் மனம் என்ன நிலையில் இருந்தாலும்
அதனை ஒரு நிலைக்குக் கொண்டுவர
ஒரு கோப்பை உன் நினைவுகளும்
உன்னைப் பற்றிய சிலபக்கக் கவிதைகளுமே
எனக்கு மருந்தாகின்றன..  
பெண்களின் பிரசவ வலி குழந்தை பிறக்கும்வரை என்பார்கள்..  
ஆனால் நானோ, காதலை பிரசவித்த கணம் முதல் 
சொல்லவொண்ணா வலியை அனுபவித்து வருகிறேன்..  
ஏனோ தெரியவில்லை 
உன்னை மறக்கவும் முடியவில்லை
உன் நினைவுகளை அழிக்கவும் முடியவில்லை
நீயாவது என்னை நோக்கி முதல் அடியை எடுத்துவைக்கக் கூடாதா.. 
எஞ்சியிருக்கும் என் வாழ்நாள் முழுதும் 
எனக்காகக் காதல் வைத்திருப்பது
வலிகளும் ரணங்களும்தானோ... 
உண்மையறிந்தவள் நீயோ 
மௌனம் ஒன்றைத்தவிர எதுவும் கூற மறுக்கிறாய்..  
இறைவனும் அறியாத இந்த கேள்விக்கான பதிலை
யாரிடம் போய் நான் கேட்பது??  
இப்படிக்கு...
காற்றின் திசையில் பறக்கும்
நூலறுந்த பட்டத்தைப் போல்
காதலின் திசையில்
மரணத்தை நோக்கி பயணிக்கும்
மௌனக்காதலன்...
கம்பன் மீது கோபம் எனக்கு...  
காதல் வந்தால் வீரம் வரும் என்றானே ..  
என்னைக் கோழையாக அல்லவா அடித்திருக்கிறது..  
சரி, போகட்டும் அவனை மன்னிக்கிறேன் 
உன்னை அவன் பார்த்ததில்லையாமே..
கம்பன் மீது பொறாமை எனக்கு..  
நீ இல்லாத காலத்தில் 
காதலைப் பார்த்து நிம்மதியைத் தேடிக் கொண்டானே...  
கம்பனைப் பற்றிய வியப்பு எனக்கு...!!  
நீ இல்லாத காலத்தில் எப்படி 
அவனால் காதலை இவ்வளவு 
அழகாக வடிக்க முடிந்தது..!? 
ஒத்துக் கொள்கிறேன், 
கம்பன் உன்னைப் பார்த்ததில்லை...  
தேவதைகளைப் பற்றிய கவிதை 
அவன் ஒன்றுமே எழுதவில்லையே...


காலங்கள் மாறலாம்,  
உன் மனமும் இளகலாம் 
ஒருவேளை அன்று நம் இருவருக்கும் 
இடையேயான இடைவெளி நிரப்பப்பட 
முடியாததாய் மாறிவிட்டதாக நீ வருந்தலாம்..  
ஆனால், கல்லறைக்குள் புகும் 
கடைசி மணித்துளி வரை என் கரம் 
உனக்காக நீட்டியபடியே இருக்கும்
எனை நீ காதலுடன் பார்க்கும்
அந்த கணத்தில் 
உன்விழிநீரை துடைக்கும் ஆசையில்..

காதலே..


என் கண் தொட்ட அன்றே என் இதயம் தொட்டவள்
என் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு
அப்பாவியாய் நின்றவள்... 
என் வாசல்வரை வந்தவள் 
ஏனோ என் இதயக்கதவை
திறந்து பார்க்காமலே சென்றுவிட்டாள்
பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்
அதனுள் இருந்த அவள் உருவம்
இன்னும் உற்றுப்பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்
அதனுள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என் இதயமும்...  
ஏனோ தெரியவில்லை சிறகில்லா தேவதைகள்கூட 
மானுடர்களைக் கண்டுகொள்வதில்லை 
ஏதுமறியா என்னைக் கவிஞனாக்கியவளே.. 
இறுதிவரை நீ என்னை உன் காதலனாக்க மாட்டாயோ!!? 
சரி விடு... நன்றிகள் கோடி உனக்கு
ஒரு தமிழ்க்காதலனாய் என்னை ஆக்கியதற்கு...  
கல்லறை செல்லும் வரையில் 
உன் நினைவுகளில்
கவிதை வடிப்பது ஒன்றே போதும் எனக்கு...

காதலே.. 
கல்லறைக்குச் செல்லும் பாதையை நோக்கி
காத்திருக்கும் கவிஞன் பேசுகிறேன்..  
இப்போதாவது என் மனம் அழும் குரல் உன் செவிகளில் விழுகிறதா?  
காதலை வெறுத்த எனக்கு ஒரு தேவதையைக் காட்டி காதலை உணர்த்தினாய்...  
அவளோ என் காதலை மறுத்து மௌனம் சாதித்து எனக்கு மரணத்தை உணர்த்தினாள்... விளங்காது விழிக்கிறேன், 
இன்னும் எதை உணர்த்துவதற்காக என்னை உயிருடன் விட்டுவைத்திருக்கிறாய்...