Thursday, 5 March 2009

தேவதைப் பெண்ணும் அப்பாவி நானும்...!!!

உன்னோடு நான் வாழும் ஒரு யுகமும் ஒரு கணமே
நீயின்றி நான்
சாகும் ஒரு கணமும் ஒரு யுகமே
யுகங்கள் பல கழிந்த பின்பும்
கணங்கள் தேடி
கணங்கள் தேடி நகர்கிறதே
என் வாழ்க்கை
உன்னைக் கண்ட நொடி நினைத்து
தகர்கிறதே என் இதயம்...

மனமெங்கும் அவள் ஆட
என் இதயம் ஜதிபோட,
அவள் விழிகள் நான் தேட
உருண்டோடும் என் வாழ்க்கை

கண்களைப் பறித்தாள்
காதலைத் தந்தாள்
இதயத்தைப் பறித்தாள்
கவிதையைத் தந்தாள்

என் கண்களில் நீ விழுந்தாய்
இதயத்தில் பூ பூத்தது
என் காதலை வேண்டாமென்றாய்
என் கல்லறையில் பூ பூத்தது

நான் மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் என் நினைவில் வந்து கொல்கிறாயே,
பெண்ணே..
என்னை என்ன செய்ய சொல்கிறாய்..
என் அனுமதி இன்றி என் பார்வையில் பட்டு உயிரில் கலந்தவளே..
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு மரண வேதனையை அளிக்கிறதே..
தேவதைகளும் உயிர் பறிக்குமா!!
கதைகளிலும் கேட்டறியாத அதிசய பயங்கரமே..
இரு விழிகளால் உயிர் தின்று, இன்மொழியால் எனைக்கொன்றவளே..
முதலும் இறுதியுமாய்க் கேட்கிறேன்..
உன் மனதை தந்துவிடு, இல்லையேல் என்னுயிரை எடுத்து விடு...


No comments:

Post a Comment