
அன்றொரு காலைப் பொழுதினிலே, எந்தன் கண்களில் விழுந்தவளே..
கண்கள் கண்டேன், இதயம் தொலைத்தேன்!
உயிரை உருவிச் சென்றாயே, என் உயிரை உருவி சென்றாயே..
கண்டதும் காதல் என்றாலே, நகைத்தத்தில் நானும் முதல்வனன்றோ,
உன்னைக் கண்டேன் உயிர் தொலைத்தேன்,
காதலின் வலையில் நான் விழுந்தேன் (அன்றொரு)
இதயம் தேடி ஓடிவந்தேன் உன்னிடம் வந்து சேர்ந்தடைந்தேன்
உன்னை நோக்கி தவமிருந்தேன், கடவுளை நானும் வெறுத்திருந்தேன்..(அன்றொரு)
என்னுயிர் என்னிடம் கொடுத்து விட்டால் உயிருடன் நானும் நடந்திடுவேன்
என்னுயிர் கொடுத்தால் பிழைத்திடுவேன் உன்னுயிர் தந்தால் பிறந்திடுவேன்... (அன்றொரு)
Original: Azhagiya Midhilai Nagarinile..
No comments:
Post a Comment