
பெண்ணே,
என் வாழ்வின் எல்லாமாகவும் இருப்பவள் நீதான்
என் மனம் என்ன நிலையில் இருந்தாலும்
அதனை ஒரு நிலைக்குக் கொண்டுவர
ஒரு கோப்பை உன் நினைவுகளும்
உன்னைப் பற்றிய சிலபக்கக் கவிதைகளுமே
எனக்கு மருந்தாகின்றன..
பெண்களின் பிரசவ வலி குழந்தை பிறக்கும்வரை என்பார்கள்..
ஆனால் நானோ, காதலை பிரசவித்த கணம் முதல்
சொல்லவொண்ணா வலியை அனுபவித்து வருகிறேன்..
ஏனோ தெரியவில்லை
உன்னை மறக்கவும் முடியவில்லை
உன் நினைவுகளை அழிக்கவும் முடியவில்லை
நீயாவது என்னை நோக்கி முதல் அடியை எடுத்துவைக்கக் கூடாதா..
எஞ்சியிருக்கும் என் வாழ்நாள் முழுதும்
எனக்காகக் காதல் வைத்திருப்பது
வலிகளும் ரணங்களும்தானோ...
உண்மையறிந்தவள் நீயோ
மௌனம் ஒன்றைத்தவிர எதுவும் கூற மறுக்கிறாய்..
இறைவனும் அறியாத இந்த கேள்விக்கான பதிலை
யாரிடம் போய் நான் கேட்பது??
இப்படிக்கு...
காற்றின் திசையில் பறக்கும்
நூலறுந்த பட்டத்தைப் போல்
காதலின் திசையில்
மரணத்தை நோக்கி பயணிக்கும்
மௌனக்காதலன்...
No comments:
Post a Comment