Monday, 29 June 2009

சகோதரி!!

பேருந்தில் அருகில் நிற்கும்
கல்லூரிப்பெண் எருமைகளால்
இடிக்கப்ப்படும்போதும்
கடைத்தெருவில், பொதுஇடங்களில்
சகதோழிகள் கழுகுப்பார்வைகளை
எதிர்கொள்ளும்போதும்
பூக்கடை சந்தில்
உதட்டுச்சாயம் பூசிய "அழகி"
கைகாட்டி அழைக்கும்போதும்
ஏனோ நினைவுக்கு வருவதில்லை
எனக்கிருக்கும் ஒரே சகோதரி!!

திருவாளர் கு(ழ்ழி)டிகா(ழ்ழ)ரர்

சொர்க்கமென்று நினைத்திருப்பார்
பன்னீரில் நனைந்திருப்பார்
மிதந்திருப்பார்; பறந்திருப்பார்..
விடிந்ததும் தெளி(ரி)ந்திருப்பார்
தான் மிதந்த பன்னீர்
சேறென்று...
***********************************************
பொன்னிற நீரென பொங்கிப்
பாய்ந்து தம் குருதியை
புழுதியாக்கி யாக்கை முழுதும்
மிருகம் சேர்த்து மதிகெட்டலறி
தறிகெட்டோடச் செய்யும்
பாழும் மதுவினை சுவைக்க(த்து)ச்
சாகும் மாந்தரை
சாடும் வழி அறியேனே
பரம்பொருளே!!!
**********************************************
மனிதனின் துன்பத்திற்குக்
காரணமானதாலே "மது" என்று
மதுரைத்தமிழில் உரைத்தீரே சான்றோரே!!
அதை மதுரம் என்றெண்ணி
மாயும் மனிதரை
கட்டுக்குள் வைக்க
கயிறொன்று இல்லையே!!!

காதலியுமானவள் !!


விழி வழியும் துளிகளெல்லாம்
உதிரமென ஆனதிங்கே
எனக்காக துடிக்கின்ற இதயம் கூட
சுமையாகிப் போனதிங்கே
காலிரண்டும் தள்ளாட
என்மனமோ உனைனாட
விழிதுடைக்க நீயில்லை
தோள்கொடுக்க நீயில்லை
எனை அணைத்த மரணமே
ஆனதன்றோ
என் காதலியுமாய்!!!

அவள்

காற்றில் கூட சுகந்தம் சேர்க்கும் அவள் வாசனை...
ஏனோ என் காதலை மட்டும் கல்லறை சேர்க்கும் அவள் யோசனை...

காதல் பைத்தியம்

கண்ணோடு கலந்தவளோ?
என் உயிரோடு உறைந்தவளோ
அவளைக் கண்ட கணமெல்லாம்
உளம் பூத்தேன்
அவள் நடக்க மலர் விரித்தேன்
அதில் முள் குத்த அழுது தீர்த்தேன்
அவள் கண்ணில் நீர்கண்டால்
உதிரம் சிந்தினேன்
அவள் நலத்தை ஆண்டவனிடம்
நிதம் வேண்டினேன்
நான் காதல் என்றேன்
அவளோ பைத்தியம் என்றாள்!!!

Sunday, 28 June 2009

மனசெல்லாம் நீயிருக்க
இருவிழியோ உனைத்தேட
அலைபாயும் என்மனது அடங்காத காளையது
உன்னோடு உறவாடும் ஒவ்வொரு
சொல்லும்
என் காதினில் கவிபாடும்
அலைபாயும் என் மனசும்
சட்டென்று அடங்கிவிடும்

Monday, 8 June 2009

இன்றுதான் எனக்கு பிறந்த நாளாம்!!

இன்றுதான் எனக்கு பிறந்த நாளாம்!!
ஐந்து வயதில் அம்மா சொன்னாள்.. நம்பினேன்
கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்..
அம்மா, ஆடு, இலையிலிருந்து
வரலாறு முதல் வாழ்க்கை வரை
சகலமும் கற்றுத்தந்தாள்..
கல்லூரி வரை கைப்பிடித்து கூட்டிச் சென்றாள்!
இன்றுதான் எனக்குப் பிறந்த நாளாம்..
மீண்டும் சொல்கிறாள்.. நம்ப மறுக்கிறேன்...
அவளெப்படி அறிவாள்!!??
உனைப்பார்த்த கணத்தில் நான் மீண்டும் பிறந்ததை??
உண்மை சொல்லடி பெண்ணே...
எப்படி என்னைக் கவிஞனாக
இரண்டாம் முறை ஈன்றெடுத்தாய் !!??

Friday, 5 June 2009

தொடரும் வாழ்க்கை...

வாழ்க்கைப் பயணத்தில் நிஜமெனும் நிறுத்தம்
என்றும்
பொய்யாய்த் தோன்றும்...
மனதில் இருக்கும் மாயையின் ஜாலத்தால்
ஜாலம் முடியும் நேரம்
மனதும் காயம் ஆகும்
நிஜத்தின் அடியைத் தாங்கும் வலுவும் குறையும்
நிறுத்தம் அடைந்தும் தொடரும்
உண்மை தேடும் படலம்...
தொடரும் வாழ்க்கை...

வாழ்வெனும் நிலவு

வாழ்வெனும் நிலவிலும் உண்டு
வளர்பிறை, தேய்பிறை..
ஒளிரும், இருளும்
ஒளிரும் நிலவும்
இருளும் மேகம் மூட
பின் ஒளிரும் அது விலக
இருளோ ஒளியோ நிரந்தரமல்ல..
ஆனால் நிலவுண்டு வாழ்வில் என்றென்றும்...

என் காதலி..

காதலும் கனவுகளும் கடவுளின் மறுவடிவமோ!!??
பல வலிகளுக்குப் பின்னால்தான் அடையமுடிகிறது!!!

மரணத்திற்குப் பின்பும் கவிதை வடிப்பேன் அவளுக்காக..
மெளனமாக!!!

முதல் பார்வையிலேயே உயிர் கொண்டவள்
காதல் நோய் ஏவி தினம் கொல்பவள்..
விழி மின்னலில் மனம் எரிப்பவள் ஆனால்
தேவதையின் முகம் கொண்டவள்..என் காதலி..

ஆதவன் விழியுடையாள்
அன்றில் மொழியுடையாள்
தாமரை முகமுடையாள் -அவள்
குழவியின் அகமுடையாள்
தேவதயுள் சிறகிலாள்
மலர்களுள் முள்ளிலாள்