Monday 29 June, 2009

திருவாளர் கு(ழ்ழி)டிகா(ழ்ழ)ரர்

சொர்க்கமென்று நினைத்திருப்பார்
பன்னீரில் நனைந்திருப்பார்
மிதந்திருப்பார்; பறந்திருப்பார்..
விடிந்ததும் தெளி(ரி)ந்திருப்பார்
தான் மிதந்த பன்னீர்
சேறென்று...
***********************************************
பொன்னிற நீரென பொங்கிப்
பாய்ந்து தம் குருதியை
புழுதியாக்கி யாக்கை முழுதும்
மிருகம் சேர்த்து மதிகெட்டலறி
தறிகெட்டோடச் செய்யும்
பாழும் மதுவினை சுவைக்க(த்து)ச்
சாகும் மாந்தரை
சாடும் வழி அறியேனே
பரம்பொருளே!!!
**********************************************
மனிதனின் துன்பத்திற்குக்
காரணமானதாலே "மது" என்று
மதுரைத்தமிழில் உரைத்தீரே சான்றோரே!!
அதை மதுரம் என்றெண்ணி
மாயும் மனிதரை
கட்டுக்குள் வைக்க
கயிறொன்று இல்லையே!!!

No comments:

Post a Comment