வீரம் விளைவிக்க வேங்கைகள் சீறிச் சென்றன முன்னே
ஆடி மகிழ நீராழி நாடின பைங்கிளிகள்
அல்லியிடைக் கன்னியர்காள் செங்கழுநீர் நிறத்
சம்புவரையர் குலமகள்கள் ஊடே கண்பறிக்கும் மின்னலென
முழுமதியாய் நந்தினியும் உடன் இருக்க
வேட்டையாடிய காளைகளோ களைத்திரு
உயிர் பிழைத்த ஓர் சிறுத்தை ஏகி
இசைக்குயில்கள் கூட்டினுள்ளே கு
ஆதவனின் அணைப்பினிலே நதியில் நீ
அறியவில்லை இந்நிகழ்வை
சட்டென பாய்ந்தது சிறுத்தை – நங்கை போட்டேனக் கலைந்தது நெஞ்
நண்பர்கள் காதினில் கொடும் வேலெ
சீறினர் காட்டாற்று நீரில்..
சுழல் கண்ட மான்களோ தள்ளாட, வேங்கைகள் ரென்றும் கையேந்த
ஏறின கரை மண்டபத்தே..
கருங்குவளை சிவந்தது மீண்டும்..
ஆசைக் காதலா! மனம் கவர்ந்த மணாளா! என்னை ஏந்தியதும் நீயோ!?
அல்லால் பகலிலும் கனவோ! மெல்லத் திறந்தன கண்கள்
சட்டெனக் கலைந்தது கனா! ஏந்தியவன் காலன்..
அலை பாய்ந்த மனதை அடக்கிட விழைந்து வடித்தால் ஓர் கானம்
கருவிழியை மையாக்கி , நரம்புதனை தந்தியாக்கி யாழென சமைத்து
படைத்தாள் ஓர் கானச் சரம்..
இனிய புனல் அருவி தவழ் இன்ப மலை
கனிகுலவும் மரநிழலில் கைப்பிடித்து உகந்ததெல்லாம்
கனவு தானோடி, சகியே, நினைவு தானோடி..
கண்டோம் கண்டோம்! கண்ணுக்கினியன கண்டோம்
கேட்டோம் கேட்டோம் காதுக்கு இனியன கேட்டோம்!
தேனினுமினிய கானத்தின் ஊடே கலந்திருந்தாள்
காரிருள் சூழ்ந்தது
வேளை குறித்தாள் நந்தினி! அவள் வலை சேர்ந்தான் ஆதித்தன்
கொடுவாளே! உன் பலி காலம் நெருங்கியது
சோழனின் கலிகாலமும் நெருங்கியது..
அவனை யானே கொள்வேன்! வேங்கையின் குருதி சுவைப்பேன்
அல்லால், என் உயிர் துறப்பேன்!
கலைந்தன நினைவுகள், மேகலை அவ்விடம் புக
மான் விழிகள் மருண்டன கொலைவாள் கண்டு
பின் உரைத்தன ஓர் கொடுஞ்செய்தி
மறைந்தார் பழுவேட்டரையர் வெள்ளத்தில்!
இறுமாந்தாள் நந்தினி உள்மனதில்.
ஈன்றாள் அதிலும் ஓர் கொலைத் திட்டம்
தேன் பொழிந்தாள் மேகலையிடம்
அமிலத் தேன் பொழிந்தாள் அக்கு
உன் தமயன் கள்வன்! பல்லவன் தூர்த்தன்!
இதுவே உனது தாரக மந்திரம்..
அனைத்தும் யாம் அறிவோம்!
உன் மணாளனும் இப்போது பேராபத்தி
ஏகிடு அவன் இடம்.. அவனே ஓர் வீரன் இவ்விடம்
செல்லச் சொல் என் மணாளனின் வா
அவரே என் உயிர் நாடி..
ஆதித்தனின் மனம் கண்டு
உளம் கலங்கி நின்றான் வாணன், வந்தியத் தேவன்
ஓர் குரல் கலைத்தது அவன் மௌனம்.
ஆ!! பிசாசு!! மேகலையின் தேன் குரலில் ஓர் கொடுஞ்சொல்
அடியே சகி! கண்டேன் ஓர் அரக்கனை
பதறுது உள்ளம்.. என் செய்வேன்! யான் ஏது செய்வேன்!
சந்திரமதி! தேடடி என் பதி..
அல்லித் தடாகம்.. அதன் மேலே கருங்குவளை
நெருங்கி வந்தது ஓர் வண்டு! நாணிச் சாய்ந்தது அக்குவளை
மடிதுவளும் மலர் சாய்ந்து நீர் குடிக்கா வரம் வேண்டி
ஏந்தினான் வாணன், வந்தியத் தேவன்
ஊடலுடன் விழி திறந்து, காதலுடன் மொழி பகர்ந்தாள்
மான்விழியாள், கார்குழலாள்
அன்பே! உங்கள் உயிர் காக்கத் துடிக்கிறதென் இதயம்
அந்த வரம் தந்தால் பிழைப்பேன் அக்கணம்
அவன் கொலை வாள் நாடி!
இட்டுச் செல்லடி என் தோழி.. அவ்விடம் எனை இட்டுச் செல்லடி என் தோழி
தன் காதலன் கரம் பற்றி சொர்க்க திசை தேடி நடந்தால் மேகலை
அன்றொரு மாலை கன்னியவள் கன்னம்தனில் இதழ் பதிக்கக்
காதலன் முயன்றிட்ட வேட்டை மண்டபம்
அவ்விடம் முழுக்க கொலையாளிகள் கூட்டம்
சோழன் கருவறுக்கச் சீறும் நந்தினி
பழி தடுக்கப் பாயும் வாணன்
சொற்போர் தொடங்கியது அங்கே!
ஏனை விற்போர் தோற்கும் அதன் முன்னே
கணைகள் பல தொடுத்தான் வாணன்
கரு நாகம் அவள் உள்ளமும் கலங்கியதோ!!
பனித்தன சுடர் விழிகள் ரெண்டும்
சட்டெனக் கலைந்தது சபை
No comments:
Post a Comment