Tuesday 23 February, 2010

மணிமேகலை...8 மலர் உதிர்ந்தது

விதியெனும் தாயும் வாழ்வெனும் சேயும்

வஞ்சிக்க, உயிர் துறக்கும் நிலை வந்தாள் மேகலை

தன் மனம் அணைத்திட்ட காதலன் முகம் காணத் துடித்தாள்

விரைந்தான் அவளிடம் வாணன், வந்திய தேவன்

மாளிகையில் காண வில்லை

தோழியரோ அறியவில்லை

நீராழி மண்டபத்தே ஓர் கானம்

தன் கருவிழியின் மையெடுத்து நரம்புதனைத்

தந்தியாக்கி யாழ் சமைத்து

படைத்திட்ட ஓர் கானம்

இன்று ஒப்பாரியின் ஓர் வடிவம்

இனிய புனல் அருவி தவழ்

இன்ப மலைச் சாரலிலே

கனிகுலவும் மர நிழலில் கரம் பிடித்து உகந்ததெல்லாம்

கனவு தானோடி! சகியே! நினைவு தானோடி!!

ஒளியிழந்த இரு கண்கள் ஒளிர்ந்தன!

En thamayan கொடியோனில்லை

சொர்க்கம் வெறும் சொப்பனமில்லை

இந்த அற்புதமும் பொய்யில்லை

உதிர்ந்தன சொற்கள்

மடி சேர்ந்தான் அவள் சிரத்தை

கன்னியவள் கண்களோ அருவியாக,

இதழ்கள் ரெண்டும் அசைய மறுக்க,

அவள் மனம் படைத்தது ஓர் கானம்

என் நெஞ்செல்லாம் காதல் நிரப்பி கண்களில் வண்ணக் கனவுகளும் தெளித்துப்

பின் நெருப்பில் தள்ளியதேன் என் கண்ணா!

கனவில் நான் கண்ட காட்டாறு கானலாய்ப் போனதேன்?

யாக்கையை இறகாக்கிக் குருதியை மையாக்கி நான் வடித்த கவிதைகள்

யாவும் நீர்த்துப் போனதேன்?

நாளொரு நீயும் இரவொரு விண்மீனுமாய் நான் வளர்த்த காதல்

காற்றில் கலந்ததுமேன்?

நிதமொரு துளியாய் நான் சேர்த்த நம்பிக்கைக் கூடு சிதைந்ததுமேன்?

சட்டென ஓர் கணத்தில் என் வாழ்வே பொய்த்துப் போனதுமேன்?

உயிர் முழுக்க நீயிருக்க வெறும் கூட்டில் நடைபிணமாய்

எனக்கிந்த வாழ்வும் ஏன்?

விழிவழி ஒழுகும் கண்ணீரில் என்னுயிர் இன்னும் கரைந்து போகாததேன்?

நீ மற்றொருவள் மணவாளன் என்றறிந்தும் என் குலை இன்னும் அறுந்து போகததுமேன்!!?

ஒளிர்ந்தன விழிகள்!! பிரிந்தது அவள் உயிர்!!

மாண்டாள் ஓர் காதலி..

யாவரும் வாழிய பல்லாண்டு..

கரைபுரளும் காவிரியின் கரையினிலே நான் நிற்கும்

நிமிடங்கம் ஒவ்வொன்றும் என் விழிச் சுழலில் சுழன்றடிக்கும்

கற்களையும் kasiந்துருகச் செய்துவிட்ட பேதையவள்

காதலினால் கடவுளுமாய் ஆன கதை...

No comments:

Post a Comment