Tuesday 23 February, 2010

மணிமேகலையின் வரம் .. 7

தஞ்சை மாநகரம், அந்நேரம் அது ஓர் நரகம்

முழுமதியைக் காண வந்தாள் மான் விழியால்

விழியிரண்டோ குளமாக, இடை மெலிந்து துரும்பாக

வேண்டினாள் ஓர் வரம்!

என் தந்தை உயிர் வேண்டேன்! தமையன் உயிர் வேண்டேன்!

எந்தப் பாதகன் உயிரும் வேண்டேன்!

நான் புரிந்திட்ட கொடுஞ்செயலை

ஏற்றுக் கொண்ட காதலனை மீளச் செய்க!

மடை திறந்த வெள்ளம் போல்

தன் மனம் திறந்தாள் மேகலை

ஆதித்தனின் ஓலை கண்டு கலங்கின இரு கண்கள்

விம்மியது ஓர் நெஞ்சம்

விழி உயர்த்திக் கண்டாள் மேகலையின் உருவம்

இப்படியும் ஓர் காதலா!?

குந்தவையே நாணினாள்!!

விண்மீனோ மறைந்தது! ஆதவன் மீண்டும் உதித்தது!

சிறை சென்ற வாணன் அவன் திறம் கொண்டே வெளிவந்தான்

ஆடியின் பெருக்கு, காவிரியின் உவப்பு

அலைபாய்ந்ததன கண்கள்..

சுழன்று பின் சென்றது அவன் நெஞ்சம்

தன் உயிர் கரைத்து அன்பளித்த ஓர் நங்கை

மான் விழியாள் கார்குழலாள்

சம்புவரையர் குலமகள்

நாணம் எனும் சொல்லறியா மணிமேகலை,

தேவதைகளின் தேவதை

வெள்ளம் நாடி ஓடி வந்தாள் ஓர் பிச்சியென!!

கண் கலங்க, உளம் பதைக்க

உயிர் உருக ஏந்தினான் ஓர் மலரென அவளை

நாடினான் கோ உறையுமிடம்!

தர்மம் தனை காத்து நின்று

தீயவரின் கரம் ஒடுக்க

மலர்ந்தது ஓர் வசந்தம்

உற்றோரும் சுற்றாரும் சூழ்ந்திருக்க

அருள்மொழியோ தியாகச் சிகரமாகி விட

சற்றே மறந்தனர் ஓர் பிச்சியை

தன் உயிர் உருக்கி உடல் உருக்கி

அன்பை மட்டும் பிழிந்தளித்த

ஓர் நங்கை


No comments:

Post a Comment