
மலர்தாமரை முகம் கொண்டு
அதில் ஆதவன் குணம் கலந்து
படர்கொடியின் இடைகொடுத்து- பிரம்மன்
வரம் கொடுத்த விழியுடையாள்
விழியிரண்டும் வேலாக
கொடியிடையோ அசைந்தாட
மலர்மீது மணம் பரப்பி
வனம் கடந்தாள் என் தேவதை
என் தேவதை மனம் நிறைக்க
புதுக் கவிதை நான் வடிக்க
அவள் பார்வை நான் கேட்டேன்
அவள் மறுக்க நான் மரித்தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
ஆனால் அதுகூட நீ பேசினால்தான் இனிக்கிறது எனக்கு!!!
No comments:
Post a Comment